/ʌkʂʌj ɕɾiːʋʌdsʌn/
வேறு எழுத்து முறைகளில்: Akshay Srivatsan மற்றும் अक्षय् श्रीवत्सन् மற்றும் 𑀅𑀓𑁆𑀱𑀬𑁆 𑀰𑁆𑀭𑀻𑀯𑀢𑁆𑀲𑀦𑁆 மற்றும் akṣay srīvatsan மற்றும் 𑌅𑌕𑍍𑌷𑌯𑍍 𑌶𑍍𑌰𑍀𑌵𑌤𑍍𑌸𑌨𑍍
தமிழ் மொழியில் தவிர, இந்த இணையத்தளம் ஆங்கில மொழியில், லத்தீன் மொழியில், மற்றும் சம்ஸ்கிருத மொழியில் கிடைக்கும்.
நான் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்காகப் படித்துக் கொன்டிருக்கிறேன். என் ஆலோசகர்கள் கீத் வின்ஸ்டீனும் டாஸன் எங்க்லரும். இப்போழுது பணிமுறை இயக்குத்தளங்களைப் பற்றி ஆய்வைப் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.
இவர்கள் எல்லாருக்கும் ஆலோசனையுக்காகும் உதவியுக்காகும் நன்றி:
பள்ளிக்கு வெளியில், புகைப்படங்களை எடுக்கவும், பியானோவை வாசிக்கவும், மொழிகளைக் கற்றுக்கவும் எனக்குப் பிடிக்கும். எனக்கு சமூக நடனத்தையும் பிடிக்கும்—நாற்பத்தேழாவது ஸ்டான்ஃபோர்டின் வியன்னாவின் நடனத்தின் திறப்புக்குழுவைக் கூட வியன்னாவின் நடனங்களைப் பண்ண போகிறேன். நான் ஸ்டான்போர்டின் டான்ஸ்பிரேக்கின் தலைவர்; அஙே நான் நடன ஆசரியருமாக இருக்கிறேன்.
மூன்ரு வருஷங்களுக்கு CS 140E: இயக்குத்தளங்கள் வகுப்புக்காக உதவி பண்ணிக் கொண்டிருக்கிறேன்: ௨௦௨௧இல், ௨௦௨௨இல், மற்றும் ௨௦௨௩இல். ௨௦௨௨இல் CS 240LX வகுப்புக்காகவும் உதவி பண்ணினேன். இந்த இரண்டு வகுப்புகளில், மாணவர்கள் தன் புதிய யுனிக்ஸை மாத்திரி இயக்குத்தளங்களைப் பண்ணுகிறார்கள். CS 240: இயக்குத்தளங்கள் வகுப்புக்காகும் உதவி பண்ணேன் ௨௦௨௪இல்; இந்த வகுப்புவில் மாணவர்கள் இயக்குத்தளங்களைப் பற்றி கட்டுரைகளைப் படித்தார்ஃப்ஃப்கள்.
போன வருஷம் ஆயேலெட் திரேஃஜெனுடனும் ஜானத்தன் கூலாவுடனும் கூட புதிய வகப்பை CS 45: நிரலர்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டிய மென்பொருட்கள் கற்பித்தேன். ஏன் வகுப்பைப் பண்ணினோம் என்றால், நிரலர்களுக்கு நிறைய விஷயம் தெரிய வேன்டும், ஆனாலும் யாருமே சொல்லித்தர மாட்டேன் எங்கிறார். இந்த யோஜ்னை எம் ஐ டியிலிருந்து வந்தது, ஆனால் எங்களின் தடவையில் அதை விட பல விஷயங்களைச் சொல்லித் தரகிறது. இந்த வகுப்பு அடுத்து வருஷமும் CS 104: அத்தியாவசிய மென்பொருள் அமைப்புகள் அறிமுகம் ஆக நடந்தது.
நான் ஸ்டான்ஃபோர்டிலே முதுகலை பட்டத்தை முடித்தேன் (௨௦௨௦–௨௦௨௨). அதற்கு முன், நான் இளங்கலை மாணவனாக இருந்தேன் (௨௦௧௭–௨௦௨௧). நிறைய நாட்கள் முன்னால், நான் மென்லோ பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டு இருந்தேன் (௨௦௧௩–௨௦௧௭).
© 2025 Akshay Srivatsan